Kathai 2:

அன்பும்  உலகமும் 

                 ஒரு காலத்தில் சூரியனிலிருந்து ஒரு குட்டி கல் ஒன்று விண்வெளிக்கு வந்து விழுந்தது. அது மற்ற தூசுகளையும் , கற்களையும் கவர்ந்து இழுத்து சின்ன உருண்டை வடிவ பந்து போல ஆனது. அந்த பந்துக்கு கடவுள் உலகம் என்று பெயர் வைத்து விளையாடினார். 
                  ஒரு நாள் அந்த பந்தில் நீரை ஊற்றி விளையாடும் போது அதில் சின்ன சின்ன உயிர்கள் உருவானது. பின்னே அந்த உயிர்களுக்குள் சில மாற்றங்கள் செய்து பெரிய பெரிய விலங்குகளையும் , செடிகளையும் உண்டாக்கினார். 
But God was not satisfied......
                    கடவுள் பிறகு மனித பொம்மைகளை செய்து உலகத்தில் பரப்பி விட்டார். முதலில் மனிதர்களுடன் நேர்லயே பேசி அவர்களுடைய கஷ்டங்களுக்கு தீர்வு கொடுத்தார். பிறகு மனிதர்கள் இனம் பெருக பெருக, மனிதர்களுக்கிடயே குரோதம், வெறுப்பு வளர ஆரம்பித்தது. அப்போது கடவுளே  மனிதர்களை விட்டு போக ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் மனிதன் படும்   கஷ்டங்களைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவர் மனிதர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். 
                     கடவுள் தனது நண்பர்களை அழைத்து இதற்கு ஒரு விடை சொல்ல சொன்னார். அப்போது அவருடைய நண்பர்களில் ஒருவன் எழுந்து "நீங்கள் பாதாள உலகில் சென்று ஒழிந்து கொள்ளுங்கள் " என்றார்.
                      மற்றும் ஒருவர் எழுந்து "நீங்கள் கடலுக்கு அடியில் சென்று ஒழிந்து கொள்ளுங்கள் " என்றார். 
                      ஆனால்  கடவுள் இதை ஏற்றுக்  கொள்ள வில்லை. நான் மனிதர்களுக்கு உதவி செய்ய நினைகின்றேன், ஆனால் நீங்கள் என்னை கோழை போல ஒளிந்து கொள்ள சொல்கின்றீர்களா? என்று கேட்டார்.
அப்போது ஒருவர் எழுந்து, "நீங்கள் மக்களிடம் இருந்து ஒளிந்து கொள்ளுங்கள், பாதாலத்திலோ, கடலிலோ அல்ல. நீங்கள் மனிதர்களின் மனதில் ஒளிந்து கொள்ளுங்கள். எப்போது எல்லாம் மனிதன் கஷ்டப்படுகின்றானோ, எப்போது அவன் உங்களை சரணாகதி அடைகின்றானோ அப்போது நீங்கள் அவன் மனதில் இருந்து அவனுக்கு உதவி செய்யுங்கள். மனிதன் எப்போதும் தன்னை நம்பாமலும், பிறரிடம் அன்பு கொள்ளாமலும் இருக்கும் போது நீங்கள் அவனை பற்றி கவலைப்பட வேண்டாம் " என்று கூறினார். 
                        கடவளுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்து விட, அவர் மனிதர்களின் மனதில் குடியேற ஆரம்பித்தார். எப்போது மனிதன் தனது உள்ளுணர்வை நம்பி, பிறரிடம் அன்புடன் இருந்து செயல்களைச்  செய்யும் போது, அவன் வெற்றி அடைகின்றான் . பிரச்சனைகளிலிருந்தும் விடு படுகின்றான். மற்றவர்கள் தோல்வியடைகின்றார்கள் .




கருத்து:    
                            அன்பே சிவம்!!!!
                            நம்பிக்கையே வாழ்க்கை!!!



Believe Yourself!!!!

No comments:

Post a Comment