Pappa Pattu

பாட்டு 1:
   

அணிலும்  ஆடும்     அ , ஆ வாம் 
இலையும்  ஈயும்      இ  , ஈ   வாம்
உரலும்   ஊசியும்    உ ,  ஊ  வாம்
எலியும்   ஏணியும்   எ ,  ஏ    வாம்
ஐவர்    ஒட்டகம்       ஐ  ,  ஒ வாம்
ஓணான் ஒளவை   ஓ , ஒள  வாம்
அ ஃ தே  தமிழில் கற்றோமே !
அன்னை முத்தம் பெற்றோமே  !


பாட்டு  2:

ஜல் ஜல் குதிரை
ஜலக்கு  குதிரை
நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை
செஞ்சி மலை குதிரை
சீறிப் பாயும் குதிரை

பாட்டு 3:

க ச ட  த ப ற  வல்லிணமாம்
ங ஞ ண ந ம ன  மேல்ல்லிணமாம்
ய ர ல வ ழ ள  இடையினமாம் 
நல்லவங்க நம்மினமாம்

பாட்டு 4:

ஒன்னும்  ஒன்னும்  இரண்டு
நமக்கு கண்கள் இரண்டு

இரண்டும்  இரண்டும்  நாலு
நாம் குடிப்பது பாலு

மூணும்  மூணும்  ஆறு
உழைத்தால் தான் சோறு

நாலும்  நாலும்  எட்டு
ஹரிக்கு பிடித்தது லட்டு

ஐந்தும்  ஐந்தும் பத்து
அன்பே நமது சொத்து

பாட்டு 5:

ஒண்ணு ரெண்டு மூணு
ஓணான்  எங்கே கூறு
நாலு ஐந்து ஆறு
மரத்தின் மேலே பாரு
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு?





ஓணான் என்பது அதன் பேரு!!









No comments:

Post a Comment